நியூசிலந்தின் மத்திய ஆக்லந்தில் (Auckland) கட்டடம் ஒன்றில் ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஆடவரும் உயிரிழந்ததாக நியூசிலந்து காவல்துறை கூறியது.சம்பவத்தில் மேலும் சிலர் காயமுற்றனர்.
நியூசிலந்தும் ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தும் மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தொடக்க நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை என்று நியூசிலந்தின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் (Chris Hipkins) தெரிவித்தார்.போட்டி திட்டமிட்டப்படி தொடரும் என்றார் அவர்.