தமிழ் மக்களை ஏமாற்றும் ரணில்; எமது ஆட்சியில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு

19

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

‘ராஜபக்சக்கள் போல் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழர்களை ஏமாற்றுகின்றார். அவரை நம்பி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேச்சுக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்தான் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை இந்த நாட்டின் மக்கள் ஒருமித்து விரும்பும் தீர்வைப் பெற முடியும்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை நிறுவுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group