ஜனாதிபதி நாளை இந்தியாவுக்கு விஜயம்

50

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்படும்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group