ஜனாதிபதியின் பதில் செயலாளராக திருமதி சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருப்பதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் பெண் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.