சூர்யா பிறந்த நாளில் கங்குவா க்ளிம்ஸ் (வீடியோ)

53

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி கங்குவா க்ளிம்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ‘கங்குவா’ படம் 3டி தொழில்நுட்பத்தில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கங்குவா க்ளிம்ஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில்; “ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.

அரசன் வந்துவிட்டான்” எனும் கேப்ஷனுடன், வடுக்களுடன் இருக்கும் சூர்யாவின் கை புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி கங்குவா க்ளிம்ஸ் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

Join Our WhatsApp Group