பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதை அடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்க நாட்டின் மிகவும் முக்கிய ஆளும் கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய பாராளுமன்றத்தை கலைக்கும் திகதி தற்போது வரை முடிவாகவில்லை எனவும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உரிய ஆலோசனைக்குப் பிறகு அதிகார்வப்பூர்வமாக அரசு தனது முடிவை அறிவிக்கும் என பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் ஓனரங்கசீர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த அரசு அமைக்கப்படும் வரை காபந்து அரசு பிரதமராக ஷெரீப் தனது கடமைகளை தொடர்வார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல் அமைப்பின் சட்டத்தின் அடிப்படையில், பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படாவிட்டால், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் நாளுக்கு பிறகு உடனடியாக 60 நாட்களுக்குள் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.
எவ்வாறாயினும், பாகிஸ்தானின் தேர்தல் ஆணைக்குழு அதன் அரசியலமைப்பு காலத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள்
பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.