இந்தியாவில் எகிறும் தக்காளி விலை! மாற்று வழிகளை ஆராயும் சிலர்!

20

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகத் தக்காளியின் விலை மளமளவென உயர்ந்துள்ளது.சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 300 ரூபாய் வரை எட்டியதாக The Economic Times குறிப்பிட்டது.விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கூடியதால் பலர் தக்காளியை வாங்க மாற்று வழிகளை ஆராய்கின்றனர்.

துபாயில் வேலை செய்யும் ஒரு பெண் இந்தியாவில் இருக்கும் தாயாரிடம் ஏதேனும் வேண்டுமா எனக் கேட்டதற்கு அவரின் தாயார் 10 கிலோகிராம் தக்காளியை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார்.அந்தப் பெண்ணும் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கத் தக்காளிகளை அனுப்பி வைத்ததாக The Economic Times கூறியது.’Revs’ எனும் Twitter கணக்கை வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் சகோதரி அந்தச் சம்பவம் குறித்து அவரது Twitter பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரது சகோதரி கைப்பெட்டியில் 10 கிலோகிராம் தக்காளியை அனுப்பிவைத்ததாக ‘Revs’ தெரிவித்தார்.”எங்கள் வீட்டில் எடுத்ததற்கெல்லாம் தக்காளிதான்! ஊறுகாய்,சட்னி ஆகியவற்றை எங்கள் அம்மா அடிக்கடி செய்வதுண்டு,” என்றார் அவர்.அந்தப் பதிவைக் கண்ட இணையவாசிகள் தாயாரின் மீது மகள் வைத்திருந்த அன்பைப் பெரிதும் பாராட்டினர்.பணவீக்கத்தின்போது அம்மாவுக்கு உதவிய அவருக்குச் சிறந்த மகளுக்கான விருதைக் கொடுக்க வேண்டும் எனப்பாராட்டியவர்கள் ஒருபுறம். வேறுசிலர் விமான நிலையத்தின் சுங்கத்துறையில் அவர் அகப்படாமல் இருந்தால் நல்லது என வேடிக்கையாகக் கூறினர்.

Join Our WhatsApp Group