மஹியங்கனையில் வீடொன்றை யானை தாக்கி முதியவர் பலி

40

மஹியங்கனை தெஹிகொல்ல கிராமத்தில் இன்று (19) அதிகாலை வீடொன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் அந்த வீட்டில் வசித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது குழந்தையும் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

குடகலய தெஹிகொல்ல பகுதியைச் சேர்ந்த ஈ.ஜி.தயவதி என்ற 68 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதோடு அவரது பேத்தி பியுமி லக்ஷானி (23) படுகாயமடைந்தார். அதிகாலை 2:30 மணியளவில் பாட்டியும் பேத்தியும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாட்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Join Our WhatsApp Group