ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலந்திலும் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளின் விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதுவரை இல்லாத அளவு சுமார் 1.4 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
பல ஆட்டங்களுக்குக் குறைவான நுழைவுச்சீட்டுகளே எஞ்சியுள்ளதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.நாளை (20 ஜூலை) தொடங்கவுள்ள போட்டியில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெறும்.அவற்றில் 29 ஆட்டங்கள் நியூஸிலந்திலும் 35 ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவிலும் நடைபெறும் என்றது The Guardian.
அவை ஆகஸ்டு 20ஆம் தேதி வரை நீடிக்கும்.8 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆக அதிகமாகச் சுமார் 1.3 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன.