“பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் நெருக்கடிக்காலம் ஆரம்பம்” – உலகச் சுகாதார நிறுவனம்

15

உலகச் சுகாதார நிறுவனம் பருவநிலை மாற்றத்தால் உலகளவில் நெருக்கடிக்காலம் தொடங்கிவிட்டதாக எச்சரித்துள்ளது.உலக நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் உயர்ந்துள்ளது.ஜப்பானின் 47இல் 32 மாநிலங்களுக்குத் தகிக்கும் அனல்காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் மளமளவென உயர்கிறது.அனல் காற்றால் கடந்த ஆண்டு அங்கு 60,000க்கும் அதிகமானோர் பலியாயினர்.இத்தாலியின் சிசிலி (Sicily), சார்டினியா (Sardinia) தீவுகளில் வெப்பம் 48 டிகிரி செல்சியஸை இவ்வாரம் தாண்டிவிடும்.வதைக்கும் வெயில் போதாது என்று கிரீஸில் (Greece) சுட்டெரிக்கிறது காட்டுத்தீ.

80க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.லா பால்மா (La Palma) தீவிலும் காட்டுத்தீ.தீயைக் கட்டுப்படுத்த ஸ்பானிய அதிகாரிகள் போராடுகின்றனர்.தகிக்கும் வெப்பம் அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை.மக்கள் தொகையில் கால்வாசிக்கும் மேற்பட்டோருக்கு வெப்பம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Join Our WhatsApp Group