தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சூழ்ச்சி

45

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை முழுமையாக நியமிக்காமல் காலதாமதம் செய்யும் சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமையின வழக்கு நிலுவையில் உள்ள பின்புலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவாத தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் இணைப்பதிகாரி மஞ்சுல கஜநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் அதனை தொடர்ச்சியாக பிற்பேர்டுகின்றமையானது பாரிய சூழ்ச்சியாகவே தாம் கருதுவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐந்து உறுப்பினர்களை நியமிப்பதற்கு பதிலாக தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களை கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை கொண்டு தீர்மானங்களை எடுக்கும் நோக்கத்துடன் இந்த சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்ககாட்டினார்.

அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குான உறுப்பினர்கள் விரைவாக நியமிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாகவே தாம் இதனை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு தலையீடு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவின் அன்றாட செயற்பாடுகள் மாத்திரமே தற்போது இடம்பெற்றுவருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்படாத உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Join Our WhatsApp Group