தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த நியமனம் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 4(2) (திருத்தம்) மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ளது.