தாய்மை அடைந்த பின்தான் திருமணம்.. பிரபலங்களை மறைமுகமாக தாக்கிய டாப்சி

16

நடிகை டாப்சி பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.
ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு டாப்சி, “நான் இதுவரை தாய்மை அடையவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது. திருமணம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்” என்று கேலியாக கூறினார்.

பிரபலங்கள் பலர் தாய்மைக்கு பின் திருமணம் செய்து கொண்ட நிலையில் டாப்சியின் இந்த பதிவிற்கு சமூக வலைதளத்தில் பலர் பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாக தாக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Join Our WhatsApp Group