ஐரோ. ஆணை குழு: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 4 ஆண்டுகள் நீடிப்பு

14

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு (2027 டிசம்பர் 31) நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19) தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் இச்சலுகை முடிவடைய இருந்தது.

புதிய ஜி.எஸ்.பி பிளஸ் முறைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் அதேவேளையில், இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை கட்டணச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group