இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி

71

2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது  எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ளது. 2023 ஆசிய கோப்பையில் “ஏ” மற்றும் “பி” பிரிவுகளின் கீழ் ஆறு அணிகள் பங்கேற்கும்.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள்  “ஏ” பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய அணிகள் “பி” பிரிவிலும் போட்டியிடுகின்றன.

ஒரு குழுவிலிருந்து இரண்டு அணிகள் சுப்பர் நான்கு  சுற்றுக்கு தகுதி பெறுவதுடன் இறுதிப் போட்டி செப்டம்பர் மாதம்  17 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, இந்தியா அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது.

எனவே ஆசிய கிரிக்கட் பேரவையின் தலையீட்டின் கீழ்  தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group