இந்தியாவின் ஆலக்னந்தா ஆற்றில் மின்சாரம் பாய்ந்து 15 பேர் மரணம்

15

இந்தியாவின் உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தில் உள்ள ஆலக்னந்தா ஆற்றங்கரையில் மின்மாற்றுக் கருவி ஒன்று வெடித்ததில் 15 பேர் மாண்டனர்.மேலும் குறைந்தது 15 பேர் கடுமையாகக் காயமுற்றனர் என்று காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாண்டோரில் காவல்துறை அதிகாரி ஒருவரும் பாதுகாவலர்கள் ஐவரும் அடங்குவர் என்று அதிகாரிகள் கூறினர்.அம்மாநில முதலமைச்சர் சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அது நேற்று இரவு (18 ஜூலை) நடந்தது என்றும் இன்று காலைதான் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவ்வட்டாரக் காவல்துறை அதிகாரி கூறினார்.அந்த மின்சாரக் கருவி வெடித்ததில் ஆற்றுக்கு அருகே உள்ள பாலம் மீது மின்சாரம் பாய்ந்ததாக NDTV செய்தி நிறுவனம் சொன்னது.

Join Our WhatsApp Group