ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இரண்டாம் வருட மூன்றாம் வருட மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் வருட மூன்றாம் வருட மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
நேற்று இரவு இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்ச்சியாக மோதலாக வெடித்ததனால் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை அதிரடியாக எடுத்துள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் , சுமுகமான நிலை எட்டப்படாததனால் இரண்டு தரப்புக்களும் இடைநிறுத்தப்பட்டதோடு வெளியேற்றப்பட்டார்கள்.

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக இரண்டு குழுக்கள் இடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுதும், இரண்டு தரப்புக்களும் விட்டுக் கொடுக்காமல் மோதல் நிலையை உருவாக்கிக் கொண்டிருந்ததனால், அமைதியைப் பேணும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் வெளியேற்றப்பட்ட போதும், பல்கலைக்கழகத்துக்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
நிலைமை சீரடையும் வரை இவர்கள் மீதான இடைநிறுத்தம் தொடரும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
என்றாலும், பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
