(19-07-2023) ராசி பலன்கள்

56

மேஷம்

குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மனதில் தன்னம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உயர் கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
  • அஸ்வினி : தேவைகள் நிறைவேறும்.
  • பரணி : தன்னம்பிக்கை மேம்படும்.
  • கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்

பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
  • கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.
  • ரோகிணி : முயற்சிகள் ஈடேறும்.
  • மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
  • மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
  • திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.
  • புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

கடகம்

எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
  • புனர்பூசம் : விருப்பம் நிறைவேறும்.
  • பூசம் : ஆதாயமான நாள்.
  • ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.

சிம்மம்

உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். நட்பு மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
  • மகம் : நன்மையான நாள்.
  • பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
  • உத்திரம் : அலைச்சல்கள் மேம்படும்.

கன்னி

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். நினைத்த காரியம் நடைபெறும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
  • உத்திரம் : சாதகமான நாள்.
  • அஸ்தம் : பொலிவு மேம்படும்.
  • சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மனதை உறுத்திக்கொண்டிருந்த சில இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
  • சித்திரை : தெளிவு பிறக்கும்.
  • சுவாதி : இன்னல்கள் குறையும்.
  • விசாகம் : முயற்சிகள் மேம்படும்.

விருச்சிகம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் உண்டாகும். செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
  • விசாகம் : முதலீடுகள் உண்டாகும்.
  • அனுஷம் : சுறுசுறுப்பான நாள்.
  • கேட்டை : ஆசிகள் கிடைக்கும்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். காப்பீடு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
  • மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
  • பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
  • உத்திராடம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.

மகரம்

வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படலாம். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். சோர்வு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • உத்திராடம் : அனுபவம் ஏற்படும்.
  • திருவோணம் : மதிப்பு உயரும்.
  • அவிட்டம் : வருத்தங்கள் குறையும்.

கும்பம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
  • சதயம் : பிரச்சனைகள் தீரும்.
  • பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

மீனம்

உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதமான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
  • பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
  • உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.
  • ரேவதி : சாதமான நாள்.
Join Our WhatsApp Group