மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை உருவாக்க முயற்சி

23

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்துவருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்நிலையில் அரசில் பதவிகளை வகிக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்களும், மேலும் சில மொட்டு கட்சி உறுப்பினர்களும் இணைந்தே இந்த கட்சியை உருவாக்கவுள்ளனர் என தெரியவருகின்றது.

இதற்கான ஒருங்கமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மேற்கொண்டு வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இருந்த முக்கிய புள்ளி ஒருவரும் இதன் பின்னணியில் செயற்படுகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து ராஜகிரிய பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் இந்த அரசியல் கட்சி ஸ்தாபிக்கடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group