‘முஸ்லிம் ஜனசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை’

44

கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமையானது நாட்டினுள் வெறுப்பூட்டும் ஒரு செயலாகவே காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. முஸ்லிம் ஜனசாக்களை எரித்தமையானது நாட்டின் வெறுப்பூட்டும் செயலாகவே காண்கிறோம். இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறித்து வெறுப்பூட்டும் விதமாகவே கொவிட் குழுவும் நடந்து கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராகி வருகின்றனர். இது குறித்து முழுமையான விசாரணை தேவை, அதற்கான ஒரு குழுவினை அமைச்சின் ஊடாக நிறுவ வேண்டும் என நான் சுகாதார அமைச்சரிடம் பகிரங்கமாக கோருகிறேன்..”

Join Our WhatsApp Group