மீண்டும் உயர்ந்து செல்லும் டொலரின் பெறுமதி

68

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையிலும் இன்று (18) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 314.95 ரூபாவாகவும் விற்பனை விலை 328.65 ரூபாவாகவும் காணப்பட்டது.

நேற்று (17) டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் ரூபாய் 313.29 மற்றும் ரூபாய் 327.16 ஆக பதிவாகியிருந்தன.

இதேவேளை, இன்று (18) அமெரிக்க டொலரின் “ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்” ரூ. 322.80 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நேற்று இது ரூ. 319.12 ஆக காணப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 04, ஆம் திகதிக்கு பிறகு அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் அதிகபட்ச பெறுமதி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group