நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த நீர் மற்றும் வடிகாலமைப்பு கட்டண திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் பெறுபவர்கள், கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், பொது நீர் விநியோகங்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைந்த மட்டத்தில் பேணும் வகையில், கட்டண திருத்தத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.