நித்திரை கலக்கத்தால் கோர விபத்து

85

மொரட்டுவை –  எகொட உயன பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவை-  எகொட உயன பிரதேசத்தில் டயரை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று கொண்டிருந்த கெப் வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமானதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group