பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி தான் 38 வயதான ஹசிபா நூரி.16-07-2023) பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்தார். நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் இறந்த செய்தியை ஒரு சமூக ஊடக இடுகையில் உறுதிப்படுத்தியுள்ளார். ஹசிபா நூரியின் உயிரிழப்பு பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது.சுமார் 14 லட்சம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் எண்ணற்ற ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானில் குடியேறியுள்ளனர்.