கொழும்பில் 16 இளைஞர்களை அதிரடியாக கைது செய்த பொலிஸ்!

22

கொழும்பு – கடுவலை வெலிவிட்ட வெவ வீதியில் ஞாயிற்றுக்கிழமை (16-07-2023) மாலை மோட்டார் சைக்கிள்களை பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.போக்குவரத்து கடமையில் இருந்த கடுவலை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றதுடன், சிலர் ஒற்றைச் சக்கரத்துடன், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக தெரியவந்துள்ளது.இதேவேளை, பொலிஸாரின் அறிவுறுத்தலைப் புறக்கணித்துவிட்டு குறித்த இளைஞர்கள் வேகமாகச் சென்றதுடன், அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து 16 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட வெல்லம்பிட்டிய, முல்லேரியா, அங்கொடை, மாலபே மற்றும் களனிமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (18-07-2023) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group