கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி காலமானார்

19

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.
கடந்த சில மாதமாக உடல்நலக் குறைவால் கடும் அவதிப்பட்டார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group