கிழக்கு மாகாண ஆளுநருக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் GMOA எச்சரிக்கை

59

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுகாதாரத்துறை செயல்பாடுகளில் கௌரவ ஆளுநர் தொழில்முறையற்ற ரீதியில் தலையிடுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அரசியல் ரீதியில் நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளின் நிர்வாக ரீதியான விடயத்தில் தேவையற்ற தலையீடுகளை செய்வதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினுடைய கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக சங்கத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.

மருத்துவத்துறையில் வீணான தலையீடுகளை தவிர்த்து செயல்படுவதையே நாங்கள் விரும்புகின்றோம். அதனையும் மீறி தொழில் தகமையற்ற நீங்கள், வீணான தலையீடுகள் செய்வீர்களாக இருந்தால், உங்களுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு தயங்க மாட்டோம் ” என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அழுத்கே இந்த அறிக்கையை நேற்று இரவு, திருகோண மலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்..

Join Our WhatsApp Group