நடிகர் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தில் இருந்து காவாலா எனும் முதல் பாடல் கடந்த ஜூலை 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வரும் காவாலா பாடலில் தமன்னாவின் நடனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
தமன்னா மட்டும் நடனமாடி இருந்த இப்பாடலுக்கு மற்ற நடிகைகள் நடனமாடுவது போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் காணொளிகள் உருவாக்கப்பட்டு லைராகி வருகின்றது. காவலா பாடலுக்கு தமிழ் நடிகைகள் மட்டுமின்றி கியாரா அத்வானி, கேத்ரினா கைஃப் உள்ளிட்ட பொலிவுட் நட்சத்திரங்களும் நடனமாடும் வகையில் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
செந்தில் நாயகம் என்பவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மட்டும் மாற்றி அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த காணொளிகளை ரசிகர்கள் மட்டுமின்றி அந்தந்த நடிகைகளும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களை போல இந்த ஏஐ தொழிநுட்பத்தில் நன்மை, தீமைகளும் சரிசமமாக அமைந்துள்ளது. இதன் ஆய்வு காலத்தின் தேவை. இன்று நாம் பொழுதுபோக்காக மக்களை ரசிக்க உருவாக்கப்பட்ட பிரபலங்களின் காணொளிகளின் தொகுப்பை பார்க்கலாம்.