எல்லயில் பஸ் ஒன்று பள்ளத்தில் புரண்டு விபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

60

எல்ல-வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீதியினூடாக உமா ஓயா திட்டத்தின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Join Our WhatsApp Group