அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

40

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Join Our WhatsApp Group