25 வயதான இளம்பெண்ணை மணந்த 65 வயது கோடீஸ்வரர்

78

ஸ்வீடனை சேர்ந்த நடிகரும், கோடீஸ்வரருமான டால்ஃப் லண்ட்கிரென் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 65 வயதான டால்ஃப் Rocky IV மற்றும் Creed II போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது தனிப்பட்ட பயிற்றுவிப்பாளரான 25 வயதுடைய எம்மா க்ரோக்டால் என்ற பெண்ணை மணந்துள்ளார். Dolph Lundgren and Emma KrokdalPhoto Credit: yahoo

இருவருக்கும் கிரீஸில் திருமணம் நடைபெற்றது. எம்மாவின் முதிர்ச்சியான அணுகுமுறையை பாராட்டியுள்ள டால்ஃப், ”எனக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட ஒரு தேவதை அவள்” என்று வர்ணித்தார்.

டால்ஃபுக்கு முதல் திருமணம் மூலம் 27 மற்றும் 21 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group