ராணியாக முதல் பிறந்தநாளை கொண்டாடும் கமீலா: மன்னர் சார்லஸ் தரும் பரிசு என்ன?

64

பிரித்தானிய மன்னர் சார்லஸின் மனைவி கமீலா இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராணியாக தனது முதல் பிறந்தநாளை கமீலா கொண்டாடுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில் என்ன மாதிரியான பிறந்தநாள் பரிசை கமீலாவுக்கு சார்லஸ் கொடுப்பார் என்பது குறித்து அரண்மனையின் முன்னாள் ஊழியர் பேசியுள்ளார்.

2004 முதல் 2011 வரையில் சார்லஸுக்கு சமையல்காரராக இருந்த கிராண்ட் ஹரோல்ட் கூறுகையில், சார்லஸ், கமீலாவுக்கு பிடித்த ஒரு பரிசை கொடுப்பார்.

அது ஒரு நகை அல்லது அவளுடைய நாய்களுக்கு ஏதாவது கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். ராணியாக முதல் பிறந்தநாளை கமீலா கொண்டாடுவதால் தனது மறைந்த தாயின் நகைகளில் சிலவற்றைக் கூட அவருக்கு சார்லஸ் கொடுக்கலாம் என கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group