முழு அமைச்சரவையையும் ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டும் – உதய கம்மன்பில

63

Crudia zeylanica என்ற அரிய வகை மரங்கள் மேலும் இருப்பதாக கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டு அந்த மரத்தை பிடிங்கி அகற்றியதை தற்போது நியாயப்படுத்த முற்படுவது சட்டவிரோதமானது எனவும் மரத்தை பிடிங்கி அகற்றிய குற்றத்திற்காக ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். Crudia zeylanica மரம் பிடிங்கி அகற்றப்பட்டமைக்கு காரணமான முழு அமைச்சரவையையும் ஒரு மாதத்திற்கு சிறையில் அடைக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என கூறினாலும் அமைச்சரவை அதற்கு மேலே இருப்பதாக தெரியலாம்.

இதனால், சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை தற்போது காட்ட வேண்டும். அழிந்து வரும் தவர இனங்களில் உள்ளடப்பட்டுள்ள சிகப்பு தரவு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விசேட தவரமான Crudia zeylanicaவே இவ்வாறு தன்னிச்சையான முறையில் பிடிங்கி அகற்றப்பட்டுள்ளது.

இதனிடையே பணவீக்கம் குறைந்திருந்தாலும் பொருட்களின் விலைகளில் எந்த குறைவும் ஏற்படவில்லை. பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான சகல காரணிகளும் குறைந்துள்ள நிலையில், பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும்.

வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை குறைக்காவிட்டால், அரசியல் அதில் தலையிட்டு, விலைகளை குறைக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group