முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 242 ஓட்டங்களை பெற்றது

41

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி ஐந்து விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றுள்ளது.

காலி மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி, இலங்கை அணி 65.4 ஓவர்களின் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 157பந்துகளுக்கு 94 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்களையும் நசீம் ஷா, ஆகா, சல்மான் மற்றும் அப்ரார் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இன்றையதினம் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

Join Our WhatsApp Group