கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு

21

மீண்டும் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மா, எதிர்வரும் 02 வார காலத்திற்கு மாத்திரமே போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Join Our WhatsApp Group