இலங்கை தபால்மா அதிபரால் இரண்டாம் மொழிக்கற்கை வகுப்புக்கள் சுழிபுரம் தபாலகத்தில் அங்குரார்பணம்!

65

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கூட்டுறவு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் மொழிக்கற்கை இன்றைய தினம் சுழிபுரம் பிரதான தபாலகத்தில் இலங்கை அஞ்சல் மா அதிபர் றுவான் சத்குமாரவினால் அங்குரார் பணம் செய்து வைக்கப்பட்டது.

மாணவர்களிடையே இரண்டாம் மொழியான சிங்களம் மற்றும் ஆங்கில கற்கைநெறிகளை வளர்தெடுக்கும் முகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக அஞ்சலகத்தின் நிலைமைகள் குறித்தும் அஞ்சல் மா அதிபர் கலந்துரையாடினார்.

இதன் பொழுது இலங்கை அஞ்சல் மா அதிபர் றுவான் சத்குமார அஞ்சல்மா அதிபர் செயற்பாடுகள் ராஜித கே ரணசிசிங்க வடக்கு அஞ்சல் மா அதிபதி திருமதி மதுமதி வசந்தகுமாரி, யாழ் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ் ஏ டி பெர்ணான்டோ,முத்திரை பணியக பணிப்பாளர் லங்காதி சில்வ, நுண்ணாய்வு பரிசோதகர் திரு.கே.செந்தில்குமார், சுழிபுரம் தபாலக அதிபர், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Join Our WhatsApp Group