அஸ்வெசும திட்டத்துடன் சமுர்த்தி திட்டத்தினையும் அமல் படுத்துவது தொடர்பில் பயிற்சி நெறி

47

நூருல் ஹுதா உமர்

“அஸ்வெசும ” நலன் உதவி திட்டத்துடன் இணைந்த வகையில் சமுர்த்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்தல், தொடர்பான பயிற்சி நெறி அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களில் தமிழ் மொழியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இன்று (17) அக்கரைப்பற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியின் பிரதான வளவாளராக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் கலந்து கொண்டு நடாத்தினார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார், உதவிப் பிரதேச செயலாளர் வை. றாசித் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதில் தலைமைபீட முகாமையாளர்கள், வங்கி சங்க முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள், வலய உதவியாளர்கள், மகாசங்க நிறைவேற்றுக்குழு தலைவர்கள் மற்றும் வங்கி கட்டுப்பாட்டுச் சபை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Join Our WhatsApp Group