UPDATE : வீடியோ விளையாட்டு ; உயிரை பறிகொடுத்த யாழ் பல்கலை மாணவன்

23

கொடிய மற்றும் பயங்கரமான செயல்களில் ஈடுபடுமாறு கட்டளையிடப்படும் வீடியோ விளையாட்டில் ஈடுபட்டு வந்த யாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயின்று வந்த மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சுபராஜா எழில்நாத் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வீட்டுக்கு சென்றிருந்த போது மாணவன் குறித்த வீடியோ விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அதில் வழங்கப்பட்ட கட்டளை காரணமாக அச்சமடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ விளையாட்டில் தமக்கு வழங்கப்படும் பல்வேறு கட்டளைகளை பல சவால்களை எதிர்கொண்டு அதனை செய்து முடித்து முன்நோக்கி செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

இதே விதமான வீடியோ விளையாட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வந்த மற்றுமொரு மாணவன், பாடசாலையில் உள்ள மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்றில் இருந்து கீழே குதிது காயமடைந்தார். இந்த சம்பவம் ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்தது.

யாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அச்சத்தில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த மாணவன் பெற்றோருக்கு இருந்த ஒரே மகன் என்பதுடன் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீடியோ விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் தனது நண்பர்களிடம் இந்த விளையாட்டு தொடர்பான விபரங்களை கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்த மரணம் தொடர்பாக நடந்தமரண விசாரணையில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group