விபத்துக்கள் குறித்து பொலிஸார் விளக்கம்!

39

2023 ஆம் ஆண்டில் இதுவரை 137 பேரூந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேபோல், இவ்வருடத்தின் ஜூலை 10ஆம் திகதி வரை 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, 2,088 விபத்துக்களில் கடுமையான காயங்களும், 4,450 சிறிய காயங்களுடன் விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group