க. குணராசா-ceylonsri
மதங்கள் குறித்த மேற்குலகின் மன நிலைகளை கீழைத்தேய நாடுகளுக் கு திணிக்க முயலும் ஐரோப்பாவின் போக்குகள் கண்டனத்துக்குரியன. சுவீடனில் புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை இறைதூதர் முஹம்மது நபியை கேலி செய்யும் கேலிச்சித்திரங்கள் டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேக்கில் வரையப்பட்டமை போன்ற இஸ்லாமிய நிந்தனைச் செயற்பாடுகள் ஐரோப்பாவில் தாராளமாக இடம்பெறுகின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற எண்ணப்பாடுக ளே இவ்வாறான வேத நிந்தனைகளு க்கு இடமளிக்கின்றன.
இவற்றை, கீழைத்தேய நாடுகளிலும் திணிக்க முயலும் சந்தர்ப்பங்களைத் தோற்று விக்க சில சக்திகள் முயற்சிக்கின்ற ன.இவற்றை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாகக் கண்டித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் அமைதியின்மைக்கு வழிகோலுவதை ஏற்க முடியாதென்ற கோணத்திலே தான் , ரணிலின் கண்டனம் அமைந்திருந்தது.
இரத்தினபுரியில் கடந்த வாரம் நீதிமன்ற கட்டிட தொகுதியை திறந்து வைத்து ஜனாதிபதி உரையாற்றிய போது, ஸ்வீடனில் அல்குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உட்பட பல்வேறு மத நிந்தனைகளை சுட்டிக்காட்டினார்.
இவருடைய கருத்துக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அமைதியை நிலைநாட்டுவதற்காக தன்னை அர்ப்பணித்து செயல்படும் தலைவர் என்ற பெருமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது. சர்வதேசத்தையும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் மதநிந்தனை செயல்பாடுகளையும் கண்டித்துப் பேசும் அளவுக்கு அவரிடம் சர்வதேச அரசியல் ஞானம் இருக்கிறது; அதனை விமர்சிக்கும் துணிவும் அவரிடம் இருக்கிறது.
ஆனால் நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து நீதியை நிலை நாட்ட முற்படும் ஒரு தலைவர், தமிழ் நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துத்தொடர்பில் எதுவும் கூறாமல் மௌனம் காப்பது ஏன்..?
சர்வதேச அரசியலில் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, உள்நாட்டு நீதித்துறையில் நடக்கின்ற இத்தகைய அநாகரிக செயல்களை பற்றி, எதுவும் கூறாதது, மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
.மறுபக்கம், சர்வதேசத்தில் அமைதியை விரும்பும் இவர், உள்நாட்டில் மத மோதல்களை ஏற்படுத்தும் சில சக்திகளை , கண்டுகொள்ளா மலிருப்பது கவலையளிக்கிறது.
உள்நாட்டு சமூகங்களுக்கிடையில் மன இடை வெளியை ஏற்படுத்தியுள் ள குருந்தூர் மலை விவகாரத்தில், ரணிலின் நிறைவேற்றதிகாரம் மௌனம் காப்பது ஏன் என புரியவில்லை. முத்துக் கட்சியினரின் அழுத்தங்களுக்கு அஞ்சுகிறாரா? அல்லது பௌத்த மக்களோடு முரண்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டுள்ளாரா?என்பதும் தெளிவில்லாமல் தான் இருக்கிறது.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சரத் வீரசேகர எம்.பி வெளியிட்ட கருத்துக்கள் சட்டத்தையும், ஒரே நீதியையும் ஓர நீதியாகக் காண்பித்துள்ளது. இலங்கை பௌத்த நாடு என்ற விடயத்தைப் புரிந்தவர்கள் தான், நீதிபதிகளாக இருக்க வேண்டுமென்ற பாங்கில் அமைந்துள்ள சரத்வீரசேகரவின் கருத்துக்கு அரசாங்கத்தின் தலைவரென்ற வகையில் ரணில் தரப்போ அல்லது அரசாங்கமோ உத்தியோபூர்வமாக்கு எதுவும் வெளியிடவில்லை.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், நடந்து கொண்ட நீதித்துறையின் மீதான செயல்பாடுகள் இலங்கையில் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கும் அளவுக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
சரத் வீர சேகரவின் பேச்சு, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்குக்,கிழக்கு நீதிமன்றங்கள் கடந்த வியாழக்கிழமை முற்றாக செயலிழந்தன. இதன்மூலம் வடக்குக்,கிழக்கு பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற சட்டத்தரணிகளும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.
இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட நீதித்துறையில், சிங்களவருக்கு ஒரு நீதி, தமிழருக்கு ஒரு நீதி என்ற வரையறை சொல்லப்படவில்லை. ஆகவே சரத் வீரசேகர எம் பி யின் கருத்து இனவாதத்தோடு கூடியது மட்டுமல்ல, அரசியலமைப்புக்கும் முற்றிலும் முரணானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இதைக் கண்டிக்கத்தான், சுவீடனில் உள்ள துருக்கி தூதரகம் முன்னால் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதா?துருக்கியைக் கண்டிப்பதானால், துருக்கியின் தேசிய கொடியை எரித்திருக்கலாம். மாறாக, புனித குர்ஆன் பிரதிகளை எரித்திருப்பது மதங்களை நிந்திக்கும் வழமையான ஐரோப்பிய மனநிலையென்றே மனங்கொள்ளத் தோன்றுகிறது.
இந்த நிலையில், சரத் வீரசேகர போன்றவர்களின் மத மோதல்களை ஏற்படுத்துகின்ற கருத்துக்கள், நாட்டை ஜனநாயக வாதத்திலிருந்து வேறொரு திசைக்கு இழுத்து செல்லும் என்பதை, அரசியல் தலைமைகள் புரிந்து கொண்டால்,
அதுவே ஆரோக்கியம்.