மூதூர் படுகொலை: இன்று 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..

15

மூதூர் – பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 37வது நினைவுநாள் நிகழ்வு இன்று (16) மூதூர் மணற்சேனை கிராமத்தில் நினைவுகூறப்பட்டது.

மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த 44 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களின் ஆத்மசாந்தி வேண்டி அப்பகுதி மக்களால் இன்று நினைவுநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதோடு நினைவு தினத்தின் பிரதான சுடரினையும் ஏற்றி வைத்தார்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு உருவப்படங்களுக்கு உறவினர்களால் மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Join Our WhatsApp Group