இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணத்திற்காக பெண்ணொருவர் 27 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரதேசங்களை சேர்ந்த 12 இளைஞர்கள் தமது மனைவிகளை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞர்கள் வழங்கிய மனைவிமாரின் புகைப்படத்தை பார்த்த பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். 12 இளைஞர்கள் வழங்கிய புகைப்படங்கள் ஒரே பெண்ணுடையது என்பதே இதற்கு காரணம்.
இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் சற்று ஆழமாக விசாரித்தபோது அனைவரும் ஒரே மாதிரியான கதைகளை கூறியுள்ளனர். இளம் பெண்ணொருவர் இடைத்தரகர் ஒருவரின் உதவியுடன் இளைஞர்களை திருமணம் செய்துக்கொண்ட பின்னர்,சில நாட்களில் காணாமல் போயுள்ளார்.
சம்பந்தப்பட்ட இளம் 27 பேரை இவ்வாறு ஏமாற்றி திருமணம் செய்துள்ளதுடன் தற்செயலாக 12 பேர் மாத்திரமே மாணவியை தேடி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
27 பேரை திருமணம் செய்துக்கொண்டுள்ள இளம் பெண் அவர்களுடன் 20 நாட்கள் வாழ்ந்து விட்டு, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், இளம் பெண்ணின் புகைப்படத்தை கொண்டு அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.