டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றினர் ஷாஹீன் அப்ரிடி

57

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியலில் ஷாஹீன் அப்ரிடி 19வது இடத்தை பிடித்துள்ளார்.

உபாதை காரணமாக டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியிருந்த ஷாஹீன் அப்ரிடி ஒரு வருடம் கழித்து தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கைக்கு எதிரியாக தற்போது விளையாடி வருகிறார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது காலியில் நடைபெற்று வருகிறது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரத்தன களமிறங்கினர்.

அதற்கமைய, 5.5 ஓவரில் நிஷான் மதுஷ்க பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியின் பந்துவீச்சில் ஒன்பது பந்துகளுக்கு நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய குஷால் மெண்டிஸ் 10 பந்துகளில் எட்டு ஓட்டங்களுடனும் இலங்கை அணி தலைவரான திமுத் கருணாரத்தன 16 பந்துகளில் ஆறு ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் இடைநடுவே மழை குறுக்கிட்டதால் போட்டியானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group