காத்தான்குடி முன்னாள் கோட்ட கல்வி அதிகாரி அமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோள் (குரல் பதிவு)

26

காத்தான்குடி முன்னாள் கோட்ட கல்வி அதிகாரி கலாவுதீன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி பெற்றுத் தருமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததுக் கமையவே அமைச்சர் அல்ஹாபில் நசீர் அஹமத் முன் வந்ததாக தெரிய வருகிறது.

காத்தான்குடி கோட்டக் கல்விப் பிரிவின் அலுவலக முன்னாள் கோட்ட கல்வி அதிகாரியாக கடமையாற்றிய அதிபர் சேவையின் முதலாம் தரத்தை சேர்ந்த கே.எம்.எம்.எம் கலாவுதீன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி பெற்றுத் தருமாறு கோரி சுற்றாடல் அபிவிருத்தி துறை அமைச்சர் அல்ஹாபில் நசீர் அகமத் துக்கு அனுப்பி வைத்துள்ள ஒலிநாடாவில் உருக்கமாக வேண்டு கோள் விடுத்ததுக் கமையவே மனிதாபிமான ரீதியில் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் நசீர் அகமட் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி எம் .எம் கலாவுதீனுக்கு நீதி, நியாயம் கொடுக்கவே அமைச்சர் அல்ஹாபில் நசீர் அஹமத் முன் வந்ததாக தெரிய வருகிறது
அதிபர் சேவையைச் சேர்ந்த 13 பேர் கிழக்கு மாகாணத்தில் கோட்டக்கல்வி அதிகாரியாக கடமையாற்றுகையில் தன்னை மாத்திரம் இலக்கு வைத்து இந்த அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் நசீர் அகமத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

சேவை காலத்தினுள் குற்றப்பத்திரிகை எந்த வித விசாரணைக் உட்படுத்தாத தன்னை இவ்விதம் வெளி மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்திருப்பது அநீதியான செயலெனவும் தனது வேண் டுகோளில் கலாவுதீன் 58 வயதுடைய தன்னை இறுதிக் காலத்தில் தூர பிரதேசத்துக்கு 58 கிலோமீட்டருக்கு மேற்பட்ட இடமாற்றம் செய்திருப்பது அநீதியான செயல் எனவும் கலாவுதீன் தெரிவித் துள்ளார்.

நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட தன்னை இடைநிறுத்தி விட்டு எந்த குற்றமும் செய்யப்படாத நிலையில் இடை நிறுத்திவிட்டு அரசு சேவையில் உறுதிப்படுத்தப்படாத ஒருவரை அநீதியான முறையில் நியமித்திருப்பது அநீதியான செயல் எனவும் இதற்கு நீதி பெற்றுத் தருமாறு முன்னாள் கோட்ட கல்வி அதிகாரி கலாவுதீன் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் அதிபர் சேவையில் 25 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லாத நிலையில் தன்னை சம்மாந்துறை வலயத்தின் வரிப்பத்தஞ்சேனைக்கு இடமாற்றி இருப்பது மிகவும் அநீதியான செயலெனவும் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஜனாப் கலாவுதீன் தனது ஒளிநாடாவில் அமைச்சர் நசீர் அனுப்பி வைத்துள்ளார்.

கல்விக்காக நேர்மையாக உழைத்த தனக்கு இறுதி காலகட்டத்தில் இவ்வாறு அநியாயம் எழுந்திருப்பதற்கு நீதி பெற்றுத் தருமாறு தங்களை மன்றாட்டமாக கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் கோட்ட கல்வி அதிகாரி கலாவுதீன் தனது வேண்டுகோளில் ஒளிநாடாவில் தெரிவித்துள்ளார். வேண்டுகோளை மனிதாபிமான ரீதியில் ஏற்றுக்கொண்டு தனக்கு உதவி நியாயம் பெற்று தருமாறு அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வண்ணம் கே எம் எம் கலாவுதீன் அதிபர் சேவை முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி காத்தான்குடி

Join Our WhatsApp Group