விமான நிலையங்களில் தரை கையாளுதல், கேட்டரிங் மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறையை நுழைய இலங்கை அனுமதிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த சேவைகள் தற்போது அரச ஏகபோகமாக உள்ளது.
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதற்கு தனியார் தரப்பினரை அழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், இலங்கை ஏற்கனவே விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அரச நிறுவனங்களை சீர்திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.