அமெரிக்காவில் தொடரும் சோகம் – துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

14

அமெரிக்காவின் ஜார்ஜியா

நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தலைமறைவாக உள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் என ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹென்றி கவுண்டி அதிகாரிகளின் அறிக்கையின்படி, அட்லாண்டாவிற்கு தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ப்டனில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்துவிட்டார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என மாவட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர் மெலிசா ராபின்சன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

Join Our WhatsApp Group