(15.07.2023) இன்றைய ராசி பலன்கள்

81

மேஷம்

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : பொறுமையை கடைபிடிக்கவும்.

பரணி : நிதானம் வேண்டும்.

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

ரிஷபம்

அறிமுகமில்லாதவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.

ரோகிணி : முடிவு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : தாமதங்கள் குறையும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.

கடகம்

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

பூசம் : சோர்வு நீங்கும்.

ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

சிம்மம்

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகம் : இழுபறிகள் மறையும்.

பூரம் : இன்னல்கள் குறையும்.

உத்திரம் : மனப்பக்குவம் உண்டாகும்.

கன்னி

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : முடிவு கிடைக்கும்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.

துலாம்

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

சித்திரை : தொடர்புகள் கிடைக்கும்.

சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.

விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். புரிதல் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.

அனுஷம் : விழிப்புணர்வு வேண்டும்.

கேட்டை : நெருக்கடியான நாள்.

தனுசு

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : அறிமுகம் ஏற்படும்.

பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

உத்திராடம் : தெளிவு ஏற்படும்.

திருவோணம் : மேன்மை உண்டாகும்.

அவிட்டம் : அமைதியான நாள்.

கும்பம்

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

சதயம் : அனுபவம் வெளிப்படும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்

தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலை கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தடுமாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : நினைவாற்றல் மேம்படும்.

ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

Join Our WhatsApp Group