வெற்றி நிச்சயம் வெண்ணிலா சத்தியம்.. சந்திரயான் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி

15

சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கியதால் தொடர்புகளை இழந்தது. இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக சந்திரயான்-3 விண்கலம், நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
பின்னர் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பூமியின் சுற்று வட்ட பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் வருகிற
விண்கலம் வருகிற
ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.

இந்நிலையில், சந்திரயான் விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சந்திரயான் 3

விண்ணில்

நிலைநிறுத்தப்பட்டதில்

இந்திய விஞ்ஞானிகளை

அண்ணாந்து பார்க்கிறது

அகிலம்

ஆகஸ்ட் 23

அது தடுமாறாமல்

தடம் மாறாமல்

நிலாத் தரையில்

இயங்க வேண்டும்

உலகத்தின் கண்கள்

குவிய வேண்டும்

நிலாவின் மீதும்

இந்தியா மீதும்

வெற்றி நிச்சயம்

வெண்ணிலா சத்தியம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Join Our WhatsApp Group