பொருட்களின் சில்லறை விலை குறைப்பிற்கு பின்னரும் கூட, பொது மக்களுக்கு அதன் பயனை வழங்க மறுத்துவரும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தலைதூக்கியுள்ள தற்போதைய நிலைமையில்,டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
இந்த பயனை நாட்டு மக்கள் அனுபவிக்கவேண்டும்.ஆனால் பொதுமக்களுக்கு பிரதேச ரீதியாக குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.
இதற்கு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமையே பிரதான காரணம்.
இதன்காரணமாக, பொதுமக்கள் அதிகரித்த விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர்.
எனவே, விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்கள் தொடர்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பபடும் என ரசல் சொய்சா மேலும் தெரிவித்தார்.