- வலது புறம் சார்ந்து பயணித்த பஸ் எதிரே வந்த வாகனத்தை முகம் கொடுக்க முடியாது விபத்து
பதுளை – கொழும்பு பிரதான வீதியில் – தெமோதறை பிரதேசத்தில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் 15 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (15) காலை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 15 பேரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பயணித்த குறித்த தனியார் பஸ், பாதையின் வலது பக்கம் சார்ந்து பயணித்த நிலையில் வளைவான பாதையில் எதிரே வந்த வாகனத்தை எதிர்கொள்ள முடியாமல், சாரதியினால் இடது பக்கமாக திடீரென திருப்பப்பட்ட நிலையில், பஸ் பள்ளத்தில் புரண்டு விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.